தங்கை, கள்ளக்காதலன் வெட்டி கொலை ; தி.மு.க., ஒன்றிய கவுன்சிலருக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கை, கள்ளக்காதலன் வெட்டி கொலை ; தி.மு.க., ஒன்றிய கவுன்சிலருக்கு வலை

Added : மே 18, 2020
Share

மேலுார் : மதுரை மாவட்டம், மேலுார் அருகே ஆண்டிபட்டியில், தங்கையையும், அவரது கள்ளக்காதலனையும் வெட்டி கொன்ற, தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட மூவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

ஆண்டிபட்டியில் உள்ள கண்மாய் கரையில், அன்பு நாதன், 30, ஆயம்மாள், 26, ஆகியோர், வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர். ஏ.டி.எஸ்.பி., வனிதா, டி.எஸ்.பி., சுபாஷ் விசாரித்தனர். அங்கு கிடந்த அலைபேசி, செருப்புகள், டூ - வீலரை ஆய்வு செய்தனர். அதில், இறந்த ஆயம்மாள், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மாறனின் தங்கை என, தெரியவந்தது. ஆயம்மாள், தன் கணவர் விமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தாய் வீட்டில், மூன்று குழந்தைகளுடன் வசித்தார். தமிழ்மாறன் டீக்கடையில், அதே ஊரை சேர்ந்த அன்புநாதன் கேஷியராக பணிபுரிந்த போது, ஆயம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டது.

குடும்பத்தினர் கண்டிக்கவே, நேற்று முன்தினம் இரவு இருவரும் ஊரிலிருந்து வெளியேறினர். அன்புநாதனை அலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழ்மாறன் மற்றும் நண்பர்கள், திருமணம் செய்து வைப்பதாக கூறினர். அதை நம்பி, நேற்று அதிகாலை இருவரும், டூ வீலரில் ஊருக்கு திரும்பினர். திருவாதவூர் ஆண்டிபட்டி கண்மாய் அருகே வந்த போது, தமிழ்மாறனும், அவரின் டீக்கடையில் பணிபுரிந்த இருவரும் சேர்ந்து, அன்பு நாதன், ஆயம்மாளை வெட்டி கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவின்படி, இரு தனிப்படையினர் கொலையாளிகளை தேடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X