மஹா., - பஞ்சாபில் பொதுமுடக்கம் நீட்டிப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில், பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 30 ஆயிரத்து, 706 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 1,135 ஆக உயர்ந்துள்ளது.வைரஸ் பரவலை தடுக்க, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநில தலைமை செயலர் அஜோய் மெஹ்தா, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மஹாராஷ்டிராவில், மூன்றாம் கட்ட ஊரடங்கு, இன்றுடன் நிறைவடைகிறது.

நாளை தொடங்கும், நான்காவது கட்ட ஊரடங்கு, மே, 31 வரை அமலில் இருக்கும். வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற மண்டலங்களில், கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும். .இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்., ஆட்சி நடக்கும் பஞ்சாபிலும், பொதுமுடக்கம் உத்தரவை நீடித்து, அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். மே, ௧௮ முதல் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், மே, ௩௧ வரை பொது முடக்கம் நீடிக்கும் என, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X