கிருமி நாசினியால் ஆபத்து

Added : மே 18, 2020
Share
Advertisement

ஜெனீவா : கிருமி நாசினியை தெருக்களில் தெளிப்பதால், கொரோனா வைரஸ் அகற்றப்படுவதில்லை என்பதுடன், மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் அறிக்கை:தெருக்கள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில், கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய் கிருமிகளை கொல்வதற்கு, கிருமி நாசினி தெளித்தல் பரிந்துரைக்கப்படவில்லை. ஏனெனில், அழுக்கு மற்றும் குப்பைகளால், கிருமி நாசினி செயலிழந்து விடும்.நோய்க்கிருமிகள் செயலிழக்க தேவையான காலம் வரை, கிருமி நாசினிகளால், அனைத்து மேற்பகுதிகளையும் பாதுகாக்க வாய்ப்பில்லை. தெருக்கள், நடைபாதைகள், சந்தைகளை, தொற்று நோய் கிருமிகள் தங்கியுள்ள இடங்களாக கருத முடியாது.அத்துடன், கிருமி நாசினிகளை வெளிப்புறங்களில் தெளிப்பதால், மனிதர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

தனிநபர்கள் கிருமி நாசினிகள் தெளிப்பதை, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் பரிந்துரைக்க வில்லை. பொருட்கள் மீது கிருமி நாசினிகளை நேரடியாக தெளிக்காமல், துணியில் நனைத்து துடைக்க வேண்டும். வைரஸ் பாதித்துள்ள ஒருவர் மீது, கிருமி நாசினி தெளிப்பதால், பிறருக்கு நோயை பரப்பும் தன்மை குறைந்துவிடாது. மக்கள் மீது, குளோரின் அல்லது பிற நச்சு ரசாயனங்கள் தெளிப்பதால், கண் மற்றும் தோல் எரிச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, இரைப்பை, குடல் விளைவுகளை ஏற்படுத்தும்.கொரோனா வைரஸ், பொருட்களின் மேற்பரப்புகளில் காணப்படலாம் என்றாலும், எத்தனை காலம் நோய் பரப்பும் தன்மையுடன் இருக்கும் என்பதற்கு, இதுவரை சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X