பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு: புதிய விதிமுறைகள் அறிவிப்பு- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு

Updated : மே 19, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (7+ 10)
Share
Advertisement
ஊரடங்கு, நீட்டிப்பு, புதிய விதிமுறைகள்,அறிவிப்பு  மத்திய உள்துறை அமைச்சகம் ,வெளியீடு

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது ஊரடங்கை நான்காவது முறையாக மே 31 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு
வெளியிட்டது.

இதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள துடன் வைரஸ் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வரையறை செய்யும் பொறுப்பை மாநில அரசுகளிடமே மத்திய அரசு
கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் 54 நாட்கள் முடிவடைந்த நிலையில் மே 31 வரை நீட்டிக்கும்படி தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையமும் மத்திய மாநில அரசுகளுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து நான்காம் கட்டமாக மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை
அமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது.இதில் பல புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் வைரஸ் பாதிப்பு பகுதிகளை அடையாளம் கண்டு வரையறை செய்வது
போக்குவரத்தை இயக்குவது போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே கொடுத்துள்ளது.


பொதுவான தடை@


@* உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து இயங்காது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள மருத்துவ மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் விமான
போக்குவரத்து இயங்கும்

*மெட்ரோ ரயில் சேவை இயங்காது

* பள்ளி, கல்லுாரிகள் கல்வி பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆன்லைன் மற்றும் தொலை துார கல்விக்கு தடையில்லை

* உணவகங்கள், ஓட்டல் ஆகியவற்றில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல் சேவை மட்டுமே அனுமதி

* சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் கருத்தரங்க கூடம் ஆகியவை மூடப்பட்டிருக்கும்

* விளையாட்டு அரங்குகளை திறக்கலாம்; ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை
* சமூக அரசியல் விளையாட்டு பொழுது போக்கு கலாசார வழிபாட்டு நிகழச்சிகளுக்கு
அனுமதியில்லை

* வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.


தளர்வுகள்வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற
பகுதிகளில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்:

* மாநிலங்களுக்கு இடையேயான வாகன போக்குவரத்து மற்றும் பஸ் உள்ளிட்ட பயணியர் போக்குவரத்தை சம்பந்தபட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரஸ்பர ஒப்புதல் பெற்று இயக்கலாம்

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் மால்களை திறக்கலாம்

* மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டங்கள் எவை என்பதை சம்பந்தபட்ட மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களே முடிவு செய்யலாம்

* மத்திய சுகாதார அமைச்சக விதிகளுக்கு உட்பட்டு அந்தந்த மாவட்ட அதிகாரிகளே
மண்டலங்களை வரையறை செய்யலாம்

* தனிமைப் படுத்தப்பட்ட மற்றும் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவம் தவிர பிற தேவைகளுக்கு மக்கள் வெளியில் வராமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய
வேண்டும்

* தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் விரிவான பரிசோதனை நோய் தடுப்பு நடவடிக்கை
களை மேற்கொள்ள வேண்டும்

* இரவு 7:00 மணியிலிருந்து அதிகாலை 7:00 மணி வரை தனி நபர் நடமாட்டத்துக்கு தடை நீடிக்கிறது. மருத்துவம் மற்றும் அத்தியவாசிய சேவைகளுக்கு மட்டுமே இந்த நேரத்தில் அனுமதி வழங்கப்படும்

* கர்ப்பிணி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் தீவிர நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அத்தியவாசிய தேவைகளை தவிர மற்றவற்றுக்கு வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்

* நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்காணிக்க வசதியாக 'ஆரோக்ய சேது' செயலி பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்

* மருத்துவர்கள், நர்ஸ் சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு படையினர் எந்தவித தடையும் இன்றி பணியாற்ற செல்வதை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயோன இவர்களது போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது. சரக்கு போக்குவரத்துக்கும் தடை கூடாது

* மே 19ம் தேதியிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் வைரஸ் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும்

* பயணம் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில்வே ஸ்டேஷன்களுக்குள் அனுமதிக்கப்படுவர்

* நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும்
தொழிலாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆன்லைன் வசதி பயன்படுத்தப்படும்

* பொது இடங்களில் எச்சில் துப்புவோர் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (7+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
18-மே-202023:08:54 IST Report Abuse
unmaitamil மற்றவன் சொத்தை கொள்ளையடிக்கும் மாட்டுக்கறி பிரியாணிகள், தான் என்ன உண்ணவேண்டும், குடிக்க வேண்டும் என்பதை தான்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓலமிட்டவர்கள், இன்று அடுத்தவன் குடிப்பதை பற்றி புலம்புகிறார்கள். குடிப்பதும் இல்லாததும் அவனவன் விருப்பம். மற்றவர் ஆலோசனை அர்த்தமற்றது.
Rate this:
Cancel
Mohan Kumar - chennai,இந்தியா
18-மே-202020:40:36 IST Report Abuse
Mohan Kumar A revolution may come, then only all willbe set right for 4 or 5 decades. Where it is going to start is a question
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
18-மே-202010:31:59 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு, 144தடை இந்திய அரசு மே31 வரை நீட்டித்துள்ளது சாதாரணமானவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புதான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X