பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்வாதாரம் பாதுகாக்க அழகு கலை சங்கம் மனு

Added : மே 18, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:'வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை உறுப்பினர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.அனைத்து இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி பகுதியில் கடை மற்றும் வீடுகளில் அழகு கலை தொழில் மேற்கொண்டு வருகிறோம். சங்கத்தில், 11,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், தேவையான உதவிகளை அரசு செய்து தர வேண்டும். அத்தியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தரவும், 75 சதவீத தள்ளுபடியுடன் கடன் உதவி வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X