பொது செய்தி

தமிழ்நாடு

சுழற்சி முறையில் பணிக்கு வரும் கல்வி அலுவலர்கள்

Added : மே 18, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், இன்று முதல், கல்வித்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர தயாராகியுள்ளனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட மூன்று வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகமும் செயல்படுகிறது. 'கொரோனா' பாதிப்பு கட்டுப்பாடு நடவடிக்கையாக, கல்வித்துறை அலுவலர்களுக்கும் பணிக்கு

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், இன்று முதல், கல்வித்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர தயாராகியுள்ளனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட மூன்று வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகமும் செயல்படுகிறது. 'கொரோனா' பாதிப்பு கட்டுப்பாடு நடவடிக்கையாக, கல்வித்துறை அலுவலர்களுக்கும் பணிக்கு வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது, இப்பகுதிகளில் பாதிப்பு இல்லாததால், கல்வித்துறை அலுவலகங்களில், சுழற்சி முறையில், அலுவலர்கள், இன்று முதல் பணிக்கு வர உள்ளனர். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும், அலுவலகங்களில் தொடர்ந்து துாய்மைப்பணிகளை மேற்கொள்வதற்கும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தவிர, பொதுத்தேர்வு தேர்வறை கண்காணிப்பாளர்கள் பணிக்கு, ஆசிரியர்கள், பற்றாக்குறையாகும் பட்சத்தில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் அழைத்துக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது.இதன்படி, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்களை, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சேகரித்து, வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X