விவசாய மின் இணைப்பு கூடுதல் மின் பளு திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய மின் இணைப்பு கூடுதல் மின் பளு திட்டம்

Added : மே 18, 2020
Share
உடுமலை:விவசாய மின் இணைப்புகளுக்கு, தட்கல் புதிய கூடுதல் மின் பளு பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாய மின் இணைப்புகளுக்கு, கூடுதல் குதிரைத்திறன் மின் பளு வழங்கும், 'தட்கல் புதிய கூடுதல் மின் பளு பெறும் திட்டம்-2020-21' திட்டத்தை, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு கூடுதல் எச்.பி.,க்கு, 20 ஆயிரம் ரூபாய் செலுத்த

உடுமலை:விவசாய மின் இணைப்புகளுக்கு, தட்கல் புதிய கூடுதல் மின் பளு பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாய மின் இணைப்புகளுக்கு, கூடுதல் குதிரைத்திறன் மின் பளு வழங்கும், 'தட்கல் புதிய கூடுதல் மின் பளு பெறும் திட்டம்-2020-21' திட்டத்தை, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு கூடுதல் எச்.பி.,க்கு, 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதிகப்பட்சமாக ஒரு விவசாய மின் இணைப்புக்கு, 15 எச்.பி., வரை வழங்கப்படுகிறது.மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது விவசாய மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள், கூடுதல் மின் பளு பெற்றுக்கொள்ளலாம். இதற்காக விவசாயிகள், விண்ணப்ப பதிவு கட்டணம், ரூ. 100 மற்றும் நில ஆவணம் உள்ளிட்டவற்றுடன், மின் வாரிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X