மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், மண் மாதிரி சேகரிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது: பயிர் முழுமையுடன் வளர்ந்து அதிக மகசூல் தரவேண்டுமnனால், மண் வளம் மிக முக்கியமாகும். அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் மண்வள மேலாண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.ரசாயன உரங்கள் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும் மண் பரிசோதனை அவசியம். அறுவடைக்குப்பின், மண்ணில் ஊட்டச்சத்துகள் குறைந்து விடும். இதைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த அளவில் உரங்கள் இடுவதற்கு, மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டும்.பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகதிறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைந்திட வேண்டும். உரிய நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்கலாம்.மடத்துக்குளம் பகுதியில், 2020--21ல் செயல்படுத்தப்படவுள்ள மண்வள அட்டை தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தில், வேடப்பட்டி, கொழுமம், தாந்தோனி, காரத்தொழுவு, குமரலிங்கம் (மேற்கு) ஆகிய ஐந்து கிராமங்களில் மண்மாதிரி சேகரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.இந்த கிராமங்களில் மட்டுமன்றி, பிற கிராமங்களிலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள், வேளாண்மைத்துறையுடன் இணைந்து, தங்கள் வயல்களில் மண் பரிசோதனை மேற்கொண்டு தேவையான உரம், இடுபொருட்கள் இட்டு சாகுபடியை பெருக்கி பயன்பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE