சோதனைச்சாவடியில் மருத்துவ பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோதனைச்சாவடியில் மருத்துவ பரிசோதனை

Added : மே 18, 2020
Share

மடத்துக்குளம்:மடத்துக்குளம் செக்போஸ்டில், வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது.மடத்துக்குளம், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நகரத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். திருப்பூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளதோடு, முக்கியமான தேசிய நெடுஞ்சாலை, 2 மாவட்ட எல்லைகளை இணைக்கிறது. இதனால், வெளிமாவட்ட மற்றும் அருகிலுள்ள மாநில ஆட்கள், இந்த வழித்தடத்தில் அதிகளவு பயணிக்கின்றனர்.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்த செக்போஸ்டை கடந்து செல்பவர்களுக்கு 'கொரோனா' தாக்கம் உள்ளதா என, மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாகனங்கள் இயக்கப்படுவதன் நோக்கம், அதன் அவசியம் குறித்தும் தெரிந்து கொள்வதோடு, அருகில் உள்ள மருத்துவக்குழுவினர் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு, கொரோனா பாதிப்பு உள்ளதா என, பரிசோதனை செய்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X