சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி, 'ஹான்ஸ்' பறிமுதல்

Added : மே 18, 2020
Share
Advertisement
 லாரியில் கடத்தி வரப்பட்ட  ரூ.1 கோடி, 'ஹான்ஸ்' பறிமுதல்

மயிலாடுதுறை : யிலாடுதுறை அருகே, லாரியில், 60 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட, புகையிலை பொருளான, 'ஹான்ஸ்' பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த, திருவாலங்காடு சோதனை சாவடியில், போலீசார் நேற்று அதிகாலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'காய்கறி அவசரம்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்த சரக்கு லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர்.லாரியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான ஹான்ஸ், 60 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு, 1 கோடி ரூபாய். இதுகுறித்து, குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து, ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்ததுடன், லாரி டிரைவ ரான, மதுரை மேலுாரை சேர்ந்த பூரணஜோதியை, 32, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X