பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வுக்கு தயார் நிலையில் பள்ளிகள் மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தல்

Added : மே 18, 2020
Share
Advertisement

உடுமலை;பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 1ம் தேதி முதல் நடத்துவதற்கு அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தகட்டப்பணிகளை மாவட்ட வாரியாக, முதன்மைக் கல்வி அலுவலர் மூலம், செயல்படுத்தப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், நடப்பாண்டில், நான்காயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். 'கொரோனா' பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, பொதுத்தேர்வுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக பின்பற்ற வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், ஒவ்வொரு தேர்வு மையத்திலும், தேர்வறையில், பத்து மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். பத்தாம் வகுப்புகள் செயல்படும் அனைத்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் முழுவதையும் தேர்வுக்கு தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை கல்வி மாவட்டத்தில், 60 பள்ளிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களிலிருந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தலைமையாசிரியர்களின் உதவியோடு, இ-பாஸ் பதிவு செய்திருக்க வேண்டும்.தேர்வு நடக்கும் மையங்களில், மாணவர் எண்ணிக்கைக்கு போதுமான அளவு தேர்வறைகள் இருப்பதும், மையங்களுக்கு போதுமான அளவு கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவது குறித்தும், கல்வி மாவட்ட அலுவலர்கள் தயார்படுத்தியிருக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X