சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பை நிறைய மது பாட்டில் வாங்கிச் சென்ற, 'குடி'மகன்கள்

Added : மே 18, 2020
Share
Advertisement
 பை நிறைய மது பாட்டில் வாங்கிச் சென்ற, 'குடி'மகன்கள்

கடலுார் : கடலுாரில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பல மணி நேரம் காத்திருந்த குடிமகன்கள், பை நிறைய மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்க வரும் 'குடி'மகன்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், பலர் டோக்கன் கிடைக்காமல், நேற்று முன்தினம் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், நேற்று காலை, 7:௦௦ மணி முதல், குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். அவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், போலீசார் அமர வைத்தனர். குடிமகன்கள் வைத்திருந்த டோக்கன்களை, போலீசார் சோதனை செய்தனர்.

இதற்கிடையே, நேற்று கூடுதலாக, 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், குடிமகன்கள் வெகு நேரம் காத்திருந்து, மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். பலர், வீட்டில் இருந்து பைகளை எடுத்து வந்து, மளிகை பொருட்கள் வாங்கி செல்வது போல், பை நிறைய மது பாட்டில்களை வாங்கி, தோளில் சுமந்து சென்றனர். காரில் வந்த பலர், பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X