பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு: சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

Added : மே 18, 2020
Share
Advertisement
 ஊரடங்கு: சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள கடைகளில், சமூக இடைவெளி பின்பற்றாதது; மாஸ்க், சானிடைசர் பயன்படுத்தாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசின் தளர்வு அறிவிப்பின் படி, கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகளில், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்; தொழிலாளர்கள் 'மாஸ்க்' அணிந்து இருக்க வேண்டும், கடைக்கு வருபவர்கள், கைகளை கழுவ சானிடைசர் வைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில், கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், அரசு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள, 16 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்த கடைகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 'மாஸ்க்' அணியாமல் வந்த, 32 பேருக்கும்; அதிகளவு கூட்டத்தை அனுமதித்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
'மாஸ்க்' அணியாமல் வந்தவர்களுக்கு, 100 ரூபாய், கடைகள் முன், 'சானிடைசர்' வைக்காதவர்களுக்கு, 200 ரூபாய், அதிகளவு பொதுமக்களை அனுமதித்த கடைகளுக்கு, ஒரு நபருக்கு, 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம், 5,250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.மேலும், 'ஸ்வீட் ஸ்டால்' ஒன்றில், காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி விபரம் இல்லாமல் இருந்த பலகாரங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X