ரேஷனில் கவனமில்லை :காற்றில் பறந்த விதிமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் கவனமில்லை :காற்றில் பறந்த விதிமுறை

Added : மே 18, 2020
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம் செலுத்திய அதிகாரிகள், ரேஷன் கடைகளை கவனிக்காமல் விட்டதால், நோய் பரவல் தடுப்பு விதிகள் காற்றில் பறந்தது.பொள்ளாச்சியில், டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, மது விற்பனை நடந்தது. கடைகளில் மது வாங்க வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் தடுப்பு விதிகளின் படி தனிமனித
 ரேஷனில் கவனமில்லை :காற்றில் பறந்த விதிமுறை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம் செலுத்திய அதிகாரிகள், ரேஷன் கடைகளை கவனிக்காமல் விட்டதால், நோய் பரவல் தடுப்பு விதிகள் காற்றில் பறந்தது.பொள்ளாச்சியில், டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, மது விற்பனை நடந்தது. கடைகளில் மது வாங்க வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் தடுப்பு விதிகளின் படி தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதிலும் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முழு கவனத்தையும் செலுத்தினர்.இதனால், மற்ற வழக்கமான பணிகளை கவனிக்க முடியவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி ரேஷன் கடைகளில் நேற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் குவிந்தது. ரேஷன் கடைகளுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் ரோந்து வராததால், மக்கள் முண்டியடித்து, தனி மனித இடைவெளி விதிகளை காற்றில் பறக்க விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X