பீட்ரூட் சாகுபடிக்கு நடவு பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பீட்ரூட் சாகுபடிக்கு நடவு பணி துவக்கம்

Added : மே 18, 2020
Share
 பீட்ரூட் சாகுபடிக்கு நடவு பணி துவக்கம்

உடுமலை:தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், பீட்ரூட் சாகுபடிக்கான நடவு பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கரிசல் மண் விளைநிலங்களில், அதிகளவு பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடியில், 65-70 நாட்களில், அறுவடை செய்யலாம் என்பதால், கிணற்று பாசனத்துக்கு, அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், தற்போது சாகுபடிக்கான நடவு பணிகளை துவக்கியுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'கோடை மழை காலத்தில், பீட்ரூட் விதைகளை நடவு செய்தால், செடியின் வளர்ச்சித்தருணத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கி விடும். ஏக்கருக்கு, 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X