பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் பொரியல் தட்டைக்கு வரவேற்பு: விலை வீழ்ச்சியை தடுக்கவும் நல்வாய்ப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement
 கேரளாவில் பொரியல் தட்டைக்கு வரவேற்பு: விலை வீழ்ச்சியை தடுக்கவும் நல்வாய்ப்பு

உடுமலை:மறையூருக்கு, பொரியல் தட்டை உட்பட காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தால், விலை வீழ்ச்சியை தடுக்கலாம் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, தட்டைப்பயறு, பீன்ஸ் வரிசையில், பொரியல் தட்டையும் கணிசமான பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. கேரளாவில், பொரியல் தட்டைக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே, அம்மாநிலத்திற்கு அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விவசாயிகள் கூறியதாவது: உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் பொரியல் தட்டை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. குறைந்த நீர் தேவை, பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களினால், 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் பகுதிகளுக்கு அதிக தேவை உள்ளதால், உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது.
வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக வந்து அறுவடை செய்து எடுத்து சென்று வந்தனர். விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். தினமும், ஏக்கருக்கு, 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. கேரளா மறையூர், மூணாறுக்கு பொரியல் தட்டை உட்பட காய்கறிகளை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்தால், காய்கறிகளின் விலை வீழ்ச்சியை தடுக்கலாம். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X