பொது செய்தி

தமிழ்நாடு

பால் கொள்முதல் அதிகரிக்க ஆவின் தீவிரம்: கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அறிவுரை

Added : மே 18, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில், பால் கொள்முதலை, 1.8 லட்சம் லி.,ஆக அதிகரிக்க, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு, மாவட்ட ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தில், சண்முகாபுரம், சுல்தான்பேட்டை மற்றும் அன்னுாரில், பால் சேமிப்பு மற்றும் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன.அதேபோல, காரச்சேரி, வடபுதுார் உள்ளிட்ட எட்டு இடங்களில், 14 சிறிய பால் குளிரூட்டும் மற்றும் சங்கச்சேமிப்பு மையங்கள் உள்ளன. கூட்டுறவு பால் கொள்முதல் மையங்களில் சேகரிக்கப்படும் பால், இரண்டு மணி நேரத்தில், இம்மையங்களில் சேர்க்கப்பட்டு குளிரூட்டப்படுகிறது.கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் இருந்து, சமீபத்தில் திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் பிரிக்கப்பட்டது, தற்போதைய நிலையில், திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகம், 3.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது.கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம், தற்போது தினமும், பற்றாக்குறைக்கு, திருப்பூர் மாவட்ட ஆவினில் இருந்து கொள்முதல் செய்கிறது.இவற்றில், பெருமளவு பால், ஈரேடு, சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆவின் கொள்முதல் மையங்களுக்கு அனுப்பி, பால் பவுடராக பெறப்படுகிறது.தற்போது, கொரோனா பரவல் காரணமாக, கோவை மாவட்ட ஓட்டல்கள், பேக்கரிகள், கல்லுாரி ஹாஸ்டல்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த, 10 ஆயிரம் லி.,பால் தடைபட்டுள்ளது.கோவை ஆவின் நிர்வாகம் கூறுகையில், ''பற்றாக்குறையை சரிகட்டி, பால் விற்பனையை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதங்களில், 20 ஆயிரம் லி.,பால் கொள்முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனங்களில், கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க முயற்சிப்பதோடு, கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X