முன் விரோதம் காரணமாக மூவர் படுகொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன் விரோதம் காரணமாக மூவர் படுகொலை

Added : மே 18, 2020
Share

மயிலாடுதுறை : சீர்காழி அருகே, மகனை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட தந்தை, குத்திக் கொல்லப்பட்டார்.

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கீழதேனுாரை சேர்ந்தவர் ராஜி, 30. அதே ஊரை சேர்ந்தவர் ஸ்ரீராம், 18. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை, ராஜி, அவரின் மைத்துனர் கலையரசன், 25, ஆகியோர், ஸ்ரீராமை தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்ட, ஸ்ரீராமின் நண்பர் அலெக்ஸ் பாண்டியனையும், 21, அடித்தனர். இந்நிலையில், தன் மகன் அலெக்ஸ் பாண்டியன் தாக்கப்பட்டதை அறிந்த அவரது தந்தையும், செங்கல் சூளை தொழிலாளியுமான சிவானந்தம், 45, அன்று இரவு, ராஜி தரப்பினரிடம், 'ஏன் என் மகனை தாக்கினீர்கள்' என, கேட்டுள்ளார்.

அப்போது, ராஜி உட்பட, ௧௮ முதல், ௫௦ வயதுடைய மூவர் சேர்ந்து, சிவானந்தத்தை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தினர். இதில், படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, ராஜி உட்பட, மூவரை கைது செய்தனர். புதுக்கோட்டைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் தினேஷ்குமார், 25. இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், தமிழரசன், 33, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. மூன்று ஆண்டுக்கு முன், தினேஷ்குமார் மதுபோதையில், தமிழரசனை அரிவாளால் வெட்டினார்.இதில், அதிர்ஷ்டவச மாக தமிழரசன் உயிர் பிழைத்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று மாலை, 4:௦௦ மணிக்கு, தினேஷ்குமார் மது குடித்து விட்டு, தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.அங்கு பைக்கில் வந்த இருவர், அவரை புதுக்குளம் அருகே உள்ள பாழடைந்த கட்டடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, தமிழரசன் இருந்துள்ளார். இருவரும் சமரச மாக போய் விடுவோம் என, தமிழரசன் கூறியதை தொடர்ந்து, அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் இருந்த, தினேஷ்குமாரை, தமிழரசன் தாக்கியதோடு, மது பாட்டிலை உடைத்து, அவருடைய கழுத்தில் குத்தி கொன்றார்.ஸ்ரீரங்கம்திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த டிரைவர் விக்னேஷ், 21. இவர், நேற்று முன்தினம், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதன்பின், இரவு வீட்டில் இருந்த விக்னேஷை, அவரது நண்பர்கள் சமாதானம் பேச அழைத்து சென்றுள்ளனர்.

ஸ்ரீரங்கம் காளியம்மன் கோவில் அருகே, அவரை வெட்டி கொலை செய்த அவர்கள், தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விக்னேஷின் நண்பர்களான, 21 முதல், 32 வயதுடைய, நான்கு பேரை கைது செய்துவிசாரிக்கின்றனர்.போதை பொருட்கள் விற்பதில், யார் பெரிய ஆள் என்பதில் ஏற்பட்ட போட்டியே, கொலைக்கு காரணம் என, விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X