பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச உயிரியல் தினம்: மாணவர்களுக்கு போட்டிகள்

Added : மே 18, 2020
Share
Advertisement

உடுமலை:மத்திய அரசின் சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சார்பில், உயிரியல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச உயிரியல் நாளாக, மே 22ம்தேதி கொண்டாடப்படுகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, 'எங்கள் தீர்வுகள் இயற்கையில் உள்ளன' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் வாசகங்களை எழுதி அனுப்ப வேண்டும்.ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் போட்டி நடக்கிறது.சிறப்பான வாசகங்கள் எழுதி அனுப்பும், 10 மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த வாசகங்களை எழுதும், 100 மாணவர்களின் வாசகங்கள் சுற்றுச்சூழல் புத்தகத்தில் மாணவர்களின் பெயருடன் பதிவிடப்படுகிறது.ஒரு மாணவர் ஒரு வாசகம் மட்டுமே அனுப்ப வேண்டும். மாணவர்கள் அவர்களின் பெயர், பள்ளியின் பெயர், தொலைபேசி எண் குறிப்பிட வேண்டும். ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளவர்கள், idbdjunior@gmail.com என்ற முகவரிக்கும், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை idbdsenior@gmail.com என்ற முகவரிக்கும் வாசகங்களை அனுப்ப வேண்டும்.மே 22ம் தேதிக்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும். முடிவுகளை, www.moef.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். போட்டி குறித்து கூடுதல் தகவல்களுக்கு கலிலியோ அறிவியல் கழகத்தை 8778201926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X