பொது செய்தி

தமிழ்நாடு

'அம்பான்' புயலால் அதிகரிக்கும் வெயில்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

சென்னை : 'அம்பான் புயல் காரணமாக, மத்திய மற்றும் வட மாவட்டங்களில், 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து, வானிலை மையம் கூறியுள்ளதாவது:வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'அம்பான்' புயல், நேற்று, தீவிர புயலாக சுழன்ற நிலையில், இன்று அதி தீவிர புயலாக, அம்பான் வலுப்பெறும். பின், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்கம் இடையில், வரும், 20ம் தேதி கரையை கடக்கும் என, தெரிகிறது.வெயில் எச்சரிக்கைபுயல் காரணமாக, நிலப் பகுதிக்குள் ஈரப்பதம் மிகுந்த கடற்காற்று வருவது தடைபட்டுள்ளது. மேலும், காற்றின் ஈரப்பதம், புயலால் உறிஞ்சப்படுவதால், வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.இதனால், தமிழகத்தின், மத்திய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில், இன்றும், நாளையும், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் காணப்படும்.


latest tamil news



கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், தஞ்சை, திருவாரூர், நாகை, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இடியுடன், இன்று மழை பெய்யும். பாம்பனில் 2ம் எண்புயல் கூண்டுவங்க கடலில் உருவாகிய, 'அம்பான்' புயல், ஒடிசா பாரதீப் துறைமுகம் தெற்கில், 1,040 கி.மீ.,லும், மேற்குவங்கம் திகா துறைமுகம் தெற்கில், 1,200 கி.மீ.,லும், வங்கதேசம் கேபுப்பரா துறைமுகம் தென்மேற்கில், 1,300 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டுள்ளது. இதனால், நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X