பொது செய்தி

தமிழ்நாடு

நாகர்கோவில் - பீஹார் சிறப்பு ரயில்

Added : மே 18, 2020
Share
Advertisement
நாகர்கோவில் : நாகர்கோவிலில் இருந்து பீஹார் மாநிலத்திற்கு, நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில், ௧,௩௨௬ பேர் சொந்த மாநிலம் சென்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் பணி புரிந்த, வட மாநில தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் வாயிலாக, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்படி, நாகர்கோவிலில் இருந்து, பீஹார் மாநிலத்திற்கு, நேற்று மதியம் சிறப்பு ரயில்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் இருந்து பீஹார் மாநிலத்திற்கு, நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில், ௧,௩௨௬ பேர் சொந்த மாநிலம் சென்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் பணி புரிந்த, வட மாநில தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் வாயிலாக, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து, பீஹார் மாநிலத்திற்கு, நேற்று மதியம் சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரயிலில், நாகர்கோவிலில் இருந்து, 847 பேர், விருதுநகர் மற்றும் சிவகங்கையில் பணியாற்றிய, ௪௭௯ பேர் என, ௧,௩௨௬ தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றனர். நாகர்கோவிலில், எஸ்.எல்.பி., பள்ளிக்கு, முதலில் வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பின், பஸ்களில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில், தொழிலாளர்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த ரயில் நாளை, பீஹார் மாநிலம் ஹாஜிப்பூர் சென்றடையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X