பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு நாட்களில் வீரியம் இழக்கும் கொரோனா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 ஏழு,நாட்களில், வீரியம், இழக்கும்,கொரோனா

மதுரை : ''கொரோனா வைரஸ், ஏழு நாட்களில் வீரியத்தை இழப்பதால், பரிசோதனையின்றி, 10 நாட்களில், 'டிஸ்சார்ஜ்' செய்யும் திட்டத்தை, மத்திய அரசு கையில் எடுத்துள்ளது,'' என, மதுரை சுகாதார பணிகள் துணை இயக்குனர், பிரியா ராஜ் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதித்தவர்கள், துவக்கத்தில் இரு வாரங்கள், மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்தனர். இரு முறை பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற, முடிவு கிடைத்தால் மட்டுமே, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். சார்ஸ் வைரஸ்தற்போது மிதமான அறிகுறியுடன் அனுமதிக்கபட்டவர்களை, 10 நாட்களில், பரிசோதனையின்றி வீட்டிற்கு அனுப்பலாம், என மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்புதிய, டிஸ்சார்ஜ் திட்டத்தை, தமிழக அரசும் செயல்படுத்த துவங்கி உள்ளது.மதுரையில் இரு நாட்களில், 25 பேர் பரிசோதனையின்றி, 10 நாள் முடிந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ஏழு நாட்கள் வீட்டுத் தனிமையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து, மதுரை சுகாதார பணிகள் துணை இயக்குனர், பிரியா ராஜ் கூறியதாவது: கொரோனா குடும்பத்தில், இதற்கு முன் தோன்றிய சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களை விட, கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறதே தவிர, அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதுஇல்லை. சார்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 15 சதவீதம் பேர் மரணத்தை தழுவினர். மெர்சால் பாதிக்கப்பட்டவர் களில், 37 சதவீதம் பேர் இறக்க நேரிட்டது. உலக அளவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரில் இறப்பவர்கள் விகிதம், 6.9 சதவீதம் தான். இந்தியாவில், 3.3 சதவீதமாக உள்ளது;

தமிழகத்தில், 1.5 சதவீதத்தை தாண்டவில்லை.விஞ்ஞானிகள் இவ்வைரஸ் பாதித்த அனைவருக்கும், தீவிர சிகிச்சை தேவையில்லை. 81 சதவீதம் பேருக்கு, அறிகுறியின்றி அல்லது, லேசான அறிகுறியுடன் தான், வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. மேலும், 14 சதவீதம் பேருக்கு, மருத்துவமனை கண்காணிப்பு தேவை. 5 சதவீதம் பேருக்கு தான், 'வென்டிலேட்டர்' அல்லதுதீவிர சிகிச்சை தேவை என்பதை, சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

உறுதிகொரோனா வைரஸ், மனித உடலில் இருக்கும் காலம், இரண்டு முதல், 14 நாட்கள். உடலில் நுழைந்ததும், வைரசின் வீரியம் படிப்படியாக உச்சம் அடைகிறது. ஏழு நாட்களில், வீரியம் குறைந்து விடுகிறது. இதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது. எனவே தான், பரிசோதனை இன்றி, டிஸ்சார்ஜ் செய்யும் திருந்திய திட்டத்தை அரசு அறிவித்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
20-மே-202013:06:49 IST Report Abuse
ocean kadappa india கோவிட் 19ன் பிறழ்வுகளில் எந்த பிரிவின் பிறழ்வில் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இனி ஆராய்வதுடன் அதற்கான மருந்தையும் கண்டுபிடிப்பார்களா.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
20-மே-202012:56:02 IST Report Abuse
ocean kadappa india “கோவிட்-19 வைரஸ் குடும்பத்தில் வைரசின் பிறழ்வுகள் மிக வேகமாக பல் வேறுபட்ட மாறுபாடான தோற்றங்களில் உறுவாகிறது என விஞ்ஞானி பீட்டர் போஸ்டர் கூறியுள்ளார். வவ்வால்களில் கண்டறியப்பட்ட வைரசுக்கு நெருக்கமான கோவிட்-19 வைரஸ் சமீப காலங்களில் சீனாவின் வூஹானில் புதியதாக தென்பட்டதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரசை ஏ வகை என குறிப்பிட்டுள்ளனர். வூஹானில் காணப்பட்ட இந்த ஏ வகை வைரசின் பிறழ்வு அமெரிக்க ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏ வகை குரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து பரவிய ரகத்திற்கு நெருக்கமானதாக காணப்படுவதாக சொல்லப் படுகிறது. இந்த ஆணிவேர் ஏ பிரிவு வைரசில் இருந்து மேலும் இரண்டு பிறழ்வுகளாக பி பிரிவு வைரஸ் அமைந்துள்ளது.இந்த வகையில் இருந்து சி வகை உண்டானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.வூஹானின் பிரதானமான பி வைரஸ் வகை கிழக்கு ஆசியாவுக்குள் அதிகம் காணப்படுவதாகவும், சி வகை வைரஸ் பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகம் உள்ளதாகவும் இந்த சி வகை வைரஸ் சீனாவில் காணப்படவில்லை ஆனால் சிங்கப்பூர் ஹாங்காங் மற்றும் தென்கொரியாவில் காணப்படுகிறது என ஆவு முடிவுகள் தெரிவிக்கின்றன. வைரஸ் பரவும் விதம் பற்றிய கணிப்பும் ஆராய்கின்றனர். நாட்டுக்கு நாடு பல பிறழ்வுகளாக பிரிந்து பரவிய கோவிட்19 குடும்பத்துக்கான ஒரே மருந்தை கண்டு பிடிப்பின் மற்ற பிறழ்வுகளுக்கும் பொருந்துமா என்பது நாளடைவில் தெரியவரும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-மே-202022:23:43 IST Report Abuse
Vena Suna எவ்வளவு விகிதம் இறப்பவர்கள் என்பதை வைத்து அலட்சியம் காட்ட வேண்டாம்...அந்த விகிதத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்...அதனால் தான் பாதுகாப்பு தேவை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X