தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., ஆபீசில் அனுமதி முப்பது பேருக்கு மட்டும்! கொரோனா தடுக்க ஏற்பாடு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement
 ஆர்.டி.ஓ., ஆபீசில் அனுமதி முப்பது பேருக்கு மட்டும்! கொரோனா தடுக்க ஏற்பாடு

கோவை:கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள், மீண்டும் துவங்கியுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஒரு நாளைக்கு, 30 விண்ணப்பங்களே ஏற்கப்படுகின்றன.
கோவையிலுள்ள வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், அன்றாடம் 10 பேருக்கு மட்டும் ஓட்டுனர் உரிமம் மற்றும், 10 பேருக்கு மட்டும் புதுப்பிக்கும் பணி, 10 பேருக்கு மட்டும் எல்.எல்.ஆர்., என, நாள் ஒன்றுக்கு, 30 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' மூலம், விண்ணப்பித்து, பணம் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். புதிய வாகனங்கள் பதிவு மற்றும் எப்.சி., புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது.
விண்ணப்பதாரர்கள் கட்டாயம், முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கூறியதாவது:இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, வரும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வரும் நபர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், உடல் வெப்பம் அளக்கும் கருவியால், பரிசோதனை செய்யப்படுகிறது.குறைந்த விண்ணப்பங்களே வருகின்றன. புதிய வாகன பதிவுக்கு, பி.எஸ்.,6 ரகம் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால், வாகனப்பதிவும் நாளொன்றுக்கு, அதிகபட்சம் பத்துதான் பதிவாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X