எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை இம்மாதத்துடன் விரட்ட உறுதி பூணுவோம்: நடைமுறைகளை பின்பற்றி வெல்வோம்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பாதிப்பு தொடர்வதால், கொரோனா வைரசை, இந்த மாதத்திற்குள் விரட்டியடிக்க, மக்கள் உறுதி ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அலோபதியுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து வரும் நிலையில், அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதோடு, சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், கொரோனாவை விரட்டி அடித்து, வெற்றியை நமதாக்க
கொரோனா,உறுதி பூணுவோம், நடைமுறை, வெல்வோம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பாதிப்பு தொடர்வதால், கொரோனா வைரசை, இந்த மாதத்திற்குள் விரட்டியடிக்க, மக்கள் உறுதி ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அலோபதியுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து வரும்
நிலையில், அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதோடு, சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், கொரோனாவை விரட்டி அடித்து, வெற்றியை நமதாக்க முடியும்.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தை
தாண்டிவிட்டது. தலைநகர் சென்னையில் மட்டும், 6,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது,
60 சதவீதத்திற்கும் அதிகம்.அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா கட்டுக்குள் வந்து விட்டது. சென்னையில் மட்டும் அடம் பிடிப்பது, கவலை அளிப்பதாக உள்ளது.

சென்னையில் பாதிப்பு தொடர்வதற்கு, சென்னை கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணமாகி விட்டது. இது தவிர, ஏப்., 26 முதல், நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால், அதற்கு முந்தைய நாளான, ஏப்., 25 சனிக்கிழமை அன்று, கடைகள், மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்தனர். வழக்கமாக, மதியம், 1:00 மணி வரை அனுமதி தரப்படும் நிலையில், அன்று மட்டும், மாலை, 5:00 மணி வரை செயல்படலாம் என, அரசு தாராளம் காட்டியது.காய்கறி, மளிகை பொருட்கள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில், அதிக கடைகளில் மக்கள் முண்டியடித்தனர். இந்த நிகழ்வும், நோய் தொற்று பரவ காரணமாகிவிட்டது.


கவலை வேண்டாம்

கடந்த வாரத்தில் தினமும் எகிறிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, சமீப சில நாட்களாகக் குறைந்தது. நேற்று மீண்டும் அதிகரித்தது. எனினும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது, ஆறுதல் அளிக்கும் செய்தி.'பாதிப்பு இப்படி அதிகமாகிறதே... என்ன செய்வது...' என, சென்னை மக்கள் கவலைப்பட வேண்டாம். அலோபதி மருந்துகளுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருந்துகளையும் அரசு பரிந்துரைத்துள்ளது.
நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
மருந்துகளுடன், கப சுர குடிநீர், மூலிகை தேநீர் உள்ளிட்டவையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

அரும்பாக்கம் தனியார் கல்லுாரியில் நடந்த சிறப்பு முகாமில், சித்தா - அலோபதி ஒருங்கிணைந்த சிகிச்சையில், ஒரு வாரத்தில், 69 பேர் வீடு திரும்பினர்.இதை தொடர்ந்து, பாதிப்பு அதிகம் உள்ள, கோடம்பாக்கம் மண்டலத்தில், பொதுமக்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு, கப சுர குடிநீர், மூலிகை தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரும்பாக்கம் சித்தா டாக்டர்களும், இந்த பணிக்கு கைகோர்த்துள்ளனர்.


சுய கட்டுப்பாடு



அடுத்தடுத்த மண்டலங்களிலும், இது போன்ற நோய் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட
உள்ளதால், படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வரும் என, மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.அதேநேரம், பொதுமக்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டை விட்டு, தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வீடு திரும்பியதும், எதையும் தொடாமல், கை, கால்களை நன்கு
சுத்தம் செய்த பின், வீட்டிற்கு செல்ல வேண்டும்.

வீட்டிலேயே கப சுர குடிநீர் தயாரித்து குடிக்கலாம். காய்ச்சல், சளி தொல்லை இருந்தால்,ஆய்வுக்கு வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் மறைக்காமல் தெரிவித்து, டாக்டர்களின்
ஆலோசனை பெற வேண்டும்.அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால், சென்னை மக்கள், எளிதாக கொரோனாவை விரட்டி, இந்த மாத இறுதிக்குள், நோயிலிருந்து மீண்டுவிடலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X