சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் 'இ-நாம்' திட்டத்தில் ஏலக்காய் ஏலம் விடுவதில் சிக்கல்

Added : மே 18, 2020
Share
Advertisement

கம்பம் : 'இ-நாம்' திட்டத்தில் ஆன்லைனில் ஏலக்காய் ஏலம் விட (நறுமணப் பொருள்) ஸ்பைசஸ் வாரியம் அறிவிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமும் இரண்டு முறை நடைபெறும் ஏலக்காய் ஏலம் கொரோனாவால் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'இ - நாம்' திட்டத்தில் ஏலக்காய் விற்பனை நடத்த ஸ்பைசஸ் வாரியம் 3 மாதங்களுக்கு அனுமதி வழங்கியது. இத்திட்டடத்தில் வாரம் ஒருமுறை புத்தடியில் 'இ ஆக்சன் சென்டரில்' நடைபெறும் என அறிவித்தது. மே 16ல் புத்தடியில் பேக்கரி நடத்தியவர் கொரோனாவால் பாதித்து தொடுபுழா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் புத்தடி சீல் வைக்கப்பட்டது. இதனால் ஸ்பைசஸ் வாரிய அறிவிப்பை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஏல விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X