சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்: கொரோனா தொற்று பரவுவதை, பா.ஜ., அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது. இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள், பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்கள் இல்லாமல் இருக்கின்றன.'டவுட்' தனபாலு: கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியாது என்பது, அனைவரும் அறிந்த, யாருக்கும், 'டவுட்'டே
 'டவுட்' தனபாலு

காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்: கொரோனா தொற்று பரவுவதை, பா.ஜ., அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது. இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள், பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்கள் இல்லாமல் இருக்கின்றன.
'டவுட்' தனபாலு: கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியாது என்பது, அனைவரும் அறிந்த, யாருக்கும், 'டவுட்'டே இல்லாத தகவல். அதற்கு, அரசியல் வண்ணம் பூசி, அறிக்கை வெளியிடுவதன் மூலம், மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள் என்பது நன்கு புலனாகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லை, சரி. காங்., ஆளும் மாநிலங்களில் என்னவாயிற்று?சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், நடிகர் சரத்குமார்: ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் சூழலில், உடற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறக்க, அரசு அனுமதித்தால் சிறப்பாக இருக்கும். முடி திருத்தும் தொழில் செயவோர், வறுமையில் தவிப்பதால், சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து, கட்டுப்பாடுகளுடன், கடையை திறக்க அரசு உதவ வேண்டும்.
'டவுட்' தனபாலு: நீங்கள் நடித்த விளம்பர படம் ஒன்றை, 'டிவி'யில் சமீபத்தில் பார்த்த போது, 'ஜிம்' செல்ல முடியாமல் உடல் பருமனாக இருந்ததையும், தலையில் நிறைய முடியும், நிறைய தாடியும் இருந்ததையும் காண முடிந்தது. அதனால் தான், ஜிம் மற்றும் சலுான்களை திறக்க கோரிக்கை விடுக்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனினும், உங்களின் இந்த இரண்டு கோரிக்கைகளும், அவசியமானவையே!தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: கொரோனா நோய் தொற்று பரிசோதனைகளை குறைத்து கொள்வதன் வாயிலாக, நோய் தொற்று குறைந்து வருகிறது அல்லது நோய் தொற்றே இல்லை என, போலியாக, வெளி உலகத்திற்கு காட்ட நினைக்கிறது, தமிழக அரசு. இது, விபரீதத்தையே விளைவிக்கும். ஒப்பந்தங்களில், போலி கணக்கு எழுதுவதை போல, கொரோனாவிலும் பொய் கணக்கு எழுதாதீர்.
'டவுட்' தனபாலு: உங்களின் இந்த அறிக்கையை பார்க்கும் போது, தமிழக அரசின் ஒவ்வொரு செயலையும், கண்ணில் எண்ணெய் விட்டு, கவனித்து வருகிறீர்கள் என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. அதுபோல, ஒப்பந்தங்களில் போலி கணக்கு எழுதுவது என்பது, பழைய ஞாபகமோ என்ற, 'டவுட்'டையும் கிளப்புகிறதே!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-மே-202014:12:32 IST Report Abuse
D.Ambujavalli சில மாவட்ட சுகாதார மையங்களில் கணக்குக்காக இத்தனை சோதனை செய்ததாகக் காட்டிவிட்டு நெகட்டிவ் ரிப்போர்ட் கொடுத்து வேலையை முடிப்பதும் நடக்கிறது என்று தெரிய வருகிறது. அப்படியே உயிரிழந்தாலும் ஆயிரம் காரணம் காட்டி கேஸை மூடாத தெரியாதவர்களா நம் ஆட்சியாளர்கள்
Rate this:
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
18-மே-202012:07:35 IST Report Abuse
Rajasekaran Palaniswamy ப.சி. பற்றிய செய்திகளை வெளியிட்டு உங்கள் பொன்னான நேரத்தையும் இடத்தையும் வீணடிக்க வேண்டாம். பைசா பரயோஜனம் இல்லாத ஒரு மனிதர் (?)
Rate this:
karutthu - nainital,இந்தியா
18-மே-202017:28:11 IST Report Abuse
karutthu... அப்படிப்பட்டவர் தான்...
Rate this:
Cancel
Bharadwaj Narayanaswamy - Chennai,இந்தியா
18-மே-202006:44:48 IST Report Abuse
Bharadwaj Narayanaswamy மற்ற நாடுகளை பார்க்கும் போது இந்தியா எவ்வளவோ பரவாயில்லை. உயிர் இழப்பு குறைவு தான். காங்கிரஸ்காரர்களால் இதை தாங்க முடியவில்லை. இந்த நேரம் காங்கிரஸ் மட்டும் ஆடசியில் இருந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். காங்கிரஸ் கூட்டு ஆடசி செய்யும் மஹாராஷ்டிரா தான் இந்தியாவிலேயே மிக மோசம். இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை. குறை சொல்வதை தவிர. கொள்ளை அடித்த சொத்திலிருந்து ஒரு பைசா கொடுக்க வக்கில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X