சாதாரண காய்ச்சல் நோயாளிக்கும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதாரண காய்ச்சல் நோயாளிக்கும்

Added : மே 18, 2020
Share

கோவை:கோவையில், காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவோருக்கு, கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், சுமார் 8 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில், 146 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.முறையான சிகிச்சை, மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்களில் 145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.கடந்த 12 நாட்களாக கோவையில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால், கோவை மெல்ல மெல்ல, பச்சை மண்டலமாக மாறி வருகிறது. எனினும், பாதிப்பு வராது என, அலட்சியமாக இருக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, சுகாதாரதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X