ரேஷன் பொருட்கள் வாங்க அவதி

Added : மே 18, 2020
Share
Advertisement

அன்னுார்: பள்ளிவாசல் வீதியில், கொரோனா தொற்று ஏற்பட்டதால், அங்கிருந்த, இரண்டு ரேஷன் கடைகள், கடந்த மாதம், நாகமாபுதுாருக்கு மாற்றப்பட்டன. ஆனால், சீல் அகற்றப்பட்டு, ஒரு வாரம் ஆகியும், மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றாததால், பொருட்கள் வாங்க முடியாமல், மக்கள் தவிக்கின்றனர்.மலைவாழ் மக்களுக்கு உதவிபெரியநாயக்கன்பாளையம்: நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை, பெரும்பதி, பெரிக்கைபதி, குஞ்சூர்பதி, மாங்குழி, பசுமணி, பசுமணிபுதுார், திருமாலுார் உள்ளிட்ட பகுதிகளில், வாழ்வாதாரம் பாதித்த மலைவாழ் மக்களுக்கு, தி.மு.க., சரவணம்பட்டி பகுதி கழக பொறுப்பாளர் பையாக்கவுண்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள், 507 குடும்பங்களுக்கு தலா,5 கிலோ அரிசி மற்றும், 6 வகையான மளிகை பொருட்களை வழங்கினர்.250 குடும்பங்களுக்கு உதவிசூலுார்: பா.ஜ., சார்பில், கலங்கல் கிராமத்தில், 250 ஏழை குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் மணி, செந்தில்குமார், முருகேசன், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.துாய்மை பணியாளர்களுக்கு உதவிசூலுார்: சூலுார் ஒன்றிய ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ., கந்தசாமி, சூலுார் ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.மளிகை பொருட்கள் வினியோகம்கோவை: ஸ்ரீ விவேகானந்தர் பேரவை மற்றும் விவேக பாரதி சேவா அறக்கட்டளை சார்பாக கோவை தியாகி குமரன் வீதி, 83-வது வார்டு அனைத்து துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 150 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான், காய்கறிகள் உள்ளிட்ட 23 பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. இதில் பேரவை தலைவர் ஜலேந்திரன், இ.ம.க.,மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்அன்னுார்: ஒட்டர்பாளையம், நடுநிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் சார்பில், 133 மாணவர்களின் பெற்றோருக்கு, தலா 5 கிலோ அரிசி அடங்கிய நிவாரண தொகுப்பினை, பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியம் வழங்கினார். ஆசிரியர், பெற்றோர் பங்கேற்றனர்.உணவு வினியோகம்அன்னுார்: மூக்கனுாரில் செயல்படும் வாஜ்பாய் கிச்சன் மூலம், 40வது நாளாக, நேற்று, மூக்கனுார் மற்றும் அருகில் உள்ள பகுதியில், ஆதரவற்ற, 50 பேருக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது. நிர்வாகிகள், அசோக்குமார், ஜெயராம், தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.750 பேருக்கு நிவாரண பொருட்கள்மதுக்கரை: மதுக்கரை பேரூராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட, வஞ்சியம்மன் கோவில் வீதி, கடைவீதி பகுதிகளில் வசிக்கும், 750 பேருக்கு, அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது; முன்னாள் கவுன்சிலர் சோபன், தன்னார்வலர் உமர் வழங்கினர்.மாணவர்களின் பெற்றோருக்கு உதவிஅன்னுார்: குன்னத்துாராம்பாளையம், துவக்கப்பள்ளியில், ஆசிரியர்கள் சார்பில், 45 மாணவர்களின் பெற்றோர் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, அரிசி, மளிகை பொருள் அடங்கிய தொகுப்பினை, தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், ஆசிரியை ரேணுகா வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.மளிகை வினியோகம்பேரூர்: காருண்யா நகர் அஞ்சல் துறையினர் சார்பில், சர்க்கார் போராத்தி, ஜாகிர் போராத்தி பழங்குடியினருக்கு, அரிசி மற்றும்மளிகைப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவிசூலுார்: காடாம்பாடி ஊராட்சி, குமாரபாளையம் அரசு துவக்கப்பள்ளி, செலக்கரச்சல் நடுநிலைப்பள்ளி, அரசூர் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், தங்கள் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.தி.மு.க., உதவிசூலுார்: சூலுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கலங்கல், காங்கயம்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகள், இருகூர், பள்ளபாளையம், கண்ணம்பாளையம் பேரூராட்சிகளில், 108 ஏழைக்குடும்பங்களுக்கு, மளிகை பொருட்களை, ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், மணி, சண்முகம் உள்ளிட்டோர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X