சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்

Added : மே 18, 2020
Share
Advertisement
 சூறாவளி காற்றுக்கு  வாழைகள் சேதம்

மேட்டுப்பாளையம்:சூறாவளிக் காற்றில், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன.காரமடை சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர்களில், கதலி, நேந்திரன் ஆகிய வாழைகள் பயிர் செய்துள்ளனர். இரு நாட்களுக்கு முன் மாலை, பலத்த சூறாவளிக் காற்று வீசியது. பத்து நிமிடம் வீசிய சூறாவளி காற்றுக்கு மருதுார், திம்மம்பாளையம் புதுார், புங்கம்பாளையம் ஆகிய சுற்றுப்பகுதி விவசாய நிலங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'நடவு முதல் ஒவ்வொரு வாழைக்கும், 150 ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளோம். நன்கு விளைந்து அறுவடை செய்யும் நிலையில், சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்து விட்டன. தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X