சரக்கு அடிக்காமலே 'வயிறு எரியுது': அதிக மது விலையால் குடிகாரர்கள் குமுறல்

Added : மே 18, 2020
Share
Advertisement
 சரக்கு அடிக்காமலே 'வயிறு எரியுது': அதிக மது விலையால் குடிகாரர்கள் குமுறல்

அன்னுார்:கோவை புறநகரில், பெரும்பாலான டாஸ்மாக் மதுக்கடைகளில், குவாட்டருக்கு, 40 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு, 80 ரூபாயும் கூடுதலாக வசூலித்ததாக, குடிமகன்கள் புகார் தெரிவித்தனர்.கோவை வடக்கு மாவட்டத்தில், 130 டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தினமும், 500 பேருக்கு மட்டும் மது வழங்கப்படும் என்றதால், காலையிலேயே கடைகளில், பலர் வரிசையில் நிற்கின்றனர்.டோக்கன் தரப்பட்டு பின்னர் கவுன்டரில், மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன.
மதுபாட்டில்களை வாங்கிய, குடிமகன்களுக்கு அதை குடிக்காமலே வயிறு எரிகிறது. காரணம், உயர்த்தப்பட்ட விலை.கரியாக்கவுண்டனுார் பத்ரான் கூறுகையில், "ராயல் பேலஸ் பிராண்டி, 150 ரூபாய் என அச்சடிக்கப்பட்டுள்ளது; 200 ரூபாய்க்கு விற்றனர். 220 ரூபாய் ஈவினிங் வாக்கர் பிராந்தியை, 300 ரூபாய்க்கு விற்கின்றனர். ஒரு பாட்டிலுக்கு, 30 முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக விற்கின்றனர்,'' என்றார்.
இந்த புகாரை, பெரும்பாலான 'குடிமகன்கள்' தெரிவித்தனர். சிலர் கடை கவுன்டர்களில் வாக்குவாதம் செய்தனர்.டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் கூறுகையில், 'மது பாட்டில்களில் பழைய விலை அச்சிடப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி பத்து ரூபாயும், நேற்று முன்தினம் மேலும் 10 ரூபாயும் அரசு உயர்த்தியுள்ளது. 'ஆப்' பாட்டில்களுக்கு 40 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளது. குடிமகன்களை கட்டுப்படுத்த, சவுக்கு கட்டை தடுப்புகள் அமைப்பது, ஒலிபெருக்கி, பாதுகாப்பு ஏற்பாடு செய்வது என பல செலவுகள் உள்ளன' என்றனர்.விலை உயர்வு குறித்து, டாஸ்மாக் கோவை மண்டல முதுநிலை மேலாளர் பரமேஸ்வரியிடம் கேட்டபோது, "இது குறித்து, கோவை வடக்கு மாவட்ட மேலாளரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறேன்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X