ஒட்டன்சத்திரத்தில் காய்கள் விலை குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்தில் காய்கள் விலை குறைவு

Added : மே 18, 2020
Share
ஒட்டன்சத்திரம் : வரத்து அதிகரித்துள்ளதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, முருங்கை, வெண்டை உட்பட பல காய்களின் விலை குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தற்போது காய்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சிலவற்றின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கரும்பு முருங்கை அதிகபட்சமாக கிலோ ரூ.23 க்கும், செடி முருங்கை ரூ.21க்கும்,

ஒட்டன்சத்திரம் : வரத்து அதிகரித்துள்ளதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, முருங்கை, வெண்டை உட்பட பல காய்களின் விலை குறைந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தற்போது காய்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சிலவற்றின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கரும்பு முருங்கை அதிகபட்சமாக கிலோ ரூ.23 க்கும், செடி முருங்கை ரூ.21க்கும், மரம் முருங்கை ரூ.15க்கும் விற்பனையானது.இந்த வாரம் கரும்பு முருங்கை ரூ.16 க்கும், செடி முருங்கை ரூ.15 க்கும், மரம் முருங்கை ரூ.9க்கும் விற்றன.

இதேபோல் கிலோ ரூ.15 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.11 க்கும், ரூ.7.85க்கு விற்ற தக்காளி ரூ.5.70க்கும், ரூ.13 க்கு விற்ற நீலம் மாங்காய் ரூ.11க்கும், ரூ.17 க்கு விற்ற செந்துாரம் ரூ.15 க்கும், ரூ.14 க்கு விற்ற கல்லாமை ரூ.13 க்கும் விற்றன. இதே போல் இன்னும் பல காய்களின் விலை குறைவாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X