பொது செய்தி

தமிழ்நாடு

'மோடி கிச்சனில் உணவு தயாரித்து 5 லட்சம் பேருக்கு வினியோகம்'

Added : மே 18, 2020
Share
Advertisement

கோவை:ஊரடங்கு காலத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும், 34 இடங்களில் மோடி கிச்சன் உருவாக்கப்பட்டு சுமார், 5 லட்சம் உணவு பொட்டலங்கள், கோவை மாநகர் முழுக்க வினியோகிக்கப்பட்டன.இது குறித்து, பா.ஜ.,கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறியதாவது:கடந்த 50 நாட்களில், கோவை மாவட்டத்தில், 34 இடங்களில் மோடி கிச்சன் அமைக்கப்பட்டு, 4 லட்சத்து 55 ஆயிரத்து 970 உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டன.கோவையில் வசிக்கும் 38,597 பேருக்கு உணவு தயாரிப்பு பொருட்கள் அடங்கிய மோடி கிட், 65,000 பேருக்கு முகக்கவசங்கள், வங்கி வாயிலாக 9 லட்சத்து 53 ஆயிரத்து 737 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.பிற மாநிலங்களிலிருந்து உதவி கேட்டு வந்த, 128 தொலைபேசி அழைப்புகளின் பேரில், 1,300 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோட்ட பொறுப்பாளர் செல்வகுமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X