ஜூன் 19 வரை வழக்குகள் விசாரணை ; சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் அறிவிப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement
புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தில், இன்று முதல், ஜூன், 19ம் தேதி வரை, வழக்குகளை விசாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா பரவலால், உச்ச நீதிமன்றத்தில், கடந்த, மார்ச், 25ம் தேதி முதல், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன.உச்ச நீதிமன்றத்துக்கு, இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை, மே,18ம் தேதி துவங்க இருந்தது. ஆனால்,

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தில், இன்று முதல், ஜூன், 19ம் தேதி வரை, வழக்குகளை விசாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.



latest tamil news




கொரோனா பரவலால், உச்ச நீதிமன்றத்தில், கடந்த, மார்ச், 25ம் தேதி முதல், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன.உச்ச நீதிமன்றத்துக்கு, இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை, மே,18ம் தேதி துவங்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கோடை விடுமுறையை, ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக, கடந்த, 15ல் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், மே, 18 முதல், ஜூன், 19 வரை, உச்ச நீதிமன்றம் பணியாற்றும் என, தெரிவிக்கப்பட்டது.


latest tamil news




நான்காம் கட்டமாக ஊரடங்கு, மே, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அடுத்த மாதம், 19ம் தேதி வரை, வழக்குகளை விசாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை, உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:உச்ச நீதிமன்றத்தில், உதவி தொலை பேசி எண், '1881' தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் செயல்பாட்டில் இருக்கும்.நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்பாகவும், மனுக்கள் தாக்கல் செய்வது தொடர்பாகவும், வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, உயர் அதிகாரிகள் விளக்கம் அளிப்பர். மே, 18ம் தேதி முதல், ஜூன், 19 வரை, வழக்கு விசாரணையை, வீடியோ கான்பரன்ஸ் அல்லது டெலி கான்பரன்ஸ் வழியாகவோ1, நீதிபதிகள் நடத்துவர்.

வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடத்தப்படும் விசாரணையை, பதிவு செய்யவோ, ஒளிபரப்பவோ கூடாது.இவ்வாறு, வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X