விலங்குகளின் எச்சில் இறைச்சி சமைத்த 5 பேருக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விலங்குகளின் 'எச்சில் இறைச்சி' சமைத்த 5 பேருக்கு அபராதம்

Added : மே 18, 2020
Share
மேட்டுப்பாளையம்:வனப்பகுதியில், பிற வனவிலங்குகள் சாப்பிட்டு, மீதம் விட்டுச்சென்ற கடமான் இறைச்சியை, எடுத்து வந்து கறி சமைத்த, 5 பேருக்கு வனத்துறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லித்துறை காப்புக்காட்டில், கடமானை ஊண் உண்ணிகள் வேட்டையாடி, சாப்பிட்டது போக, மீதியை வனப்பகுதியிலேயே விட்டுச் சென்றுள்ளது. அவ்வழியாக சென்ற நந்தவனபுதுாரை
 விலங்குகளின் 'எச்சில் இறைச்சி'  சமைத்த  5 பேருக்கு அபராதம்

மேட்டுப்பாளையம்:வனப்பகுதியில், பிற வனவிலங்குகள் சாப்பிட்டு, மீதம் விட்டுச்சென்ற கடமான் இறைச்சியை, எடுத்து வந்து கறி சமைத்த, 5 பேருக்கு வனத்துறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லித்துறை காப்புக்காட்டில், கடமானை ஊண் உண்ணிகள் வேட்டையாடி, சாப்பிட்டது போக, மீதியை வனப்பகுதியிலேயே விட்டுச் சென்றுள்ளது. அவ்வழியாக சென்ற நந்தவனபுதுாரை சேர்ந்த கிருஷ்ணன், 43, செல்வராஜ், 49 ஆகிய இருவர், 5 கிலோ இறைச்சியை வெட்டி, எடுத்து வந்துள்ளனர்.இந்த இறைச்சியை, தமது உறவினர்களான ராமசாமி, 37, செல்வம், 45, சின்னமணி, 42 ஆகிய மூவருக்கும் பிரித்துக் கொடுத்துள்ளனர். இவர்கள், 5 பேரும் இறைச்சியை சமைத்துள்ளனர்.இது குறித்து தகவல் கிடைத்த, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர்கள் ஸ்ரீராம், சுரேஷ் மற்றும் வனத்துறையினர், நந்தவன புத்துாருக்கு சென்று விசாரணை செய்தனர். இதில் ஐந்து நபர்கள், மான் இறைச்சியை சமைத்தது, விசாரணையில் தெரியவந்தது. இவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், தலா, 10 ஆயிரம் வீதம், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X