இன்று போய் நாளை வா தொடரும் அலைக்கழிப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

அன்னுார்:அன்னுார் தாலுகாவில், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த, 9,300 பேர் உள்ளனர்.இதில் 4,000க்கும் மேற்பட்டவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கோரி, வருவாய்த் துறையிடம் பதிவு செய்துள்ளனர்.பீகார் தொழிலாளர்கள் கூறுகையில், 'எங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு, பெயர் பதிவு செய்து, பல நாட்கள் ஆகிவிட்டது. வி.ஏ.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், என எங்கு சென்று, எப்போது கேட்டாலும், 'நாளை வாருங்கள்' என, திருப்பி அனுப்புகின்றனர்.பஸ் வசதியும் இல்லாததால், நீண்ட தொலைவிலிருந்து தாலுகா அலுவலகத்திற்கு தினமும் நடையாய் நடக்கிறோம். அரசு சீக்கிரம் ரயில் அல்லது பஸ் வசதி செய்து தரவேண்டும்' என்றனர்.தாலுகா அலுவலகத்தில், தினமும், கணேசபுரம், கரியாம்பாளையம், குப்பேபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, தொழிலாளர்கள் வந்து விசாரித்த வண்ணம் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X