பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., இளைஞரணி சார்பில் ஏழைகளுக்கு நிவாரணம்

Added : மே 18, 2020
Share
Advertisement

போத்தனுார்:ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியோருக்கு பா.ஜ., மாநில இளைஞரணி பொது செயலாளர் வசந்தராஜன், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கி வருகிறார்.மாநகராட்சியின், 99வது வார்டில் பணிபுரியும், 62 துாய்மை பணியாளர்களுக்கு, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்பை, கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் வழங்கினார். பொது செயலாளர் வசந்த ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வினோஜ் செல்வம் கூறுகையில், ''இளைஞரணி சார்பில் மாநிலம் முழுவதும், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோடி கிட், மூன்று லட்சம் மாஸ்க், கையுறை, சானிட்டைசர், ஐந்து லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 800 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டுள்ளது. 60 இடங்களில் மோடி கிச்சன் செயல்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X