சிஸ்டம் சரியில்லே!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'சிஸ்டம் சரியில்லே!'

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
பக்க வாத்தியம்



மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், 'கொரோனா' கட்டுப்பாட்டு அறையை, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் சமீபத்தில் ஆய்வு செய்தார்.பின், பேட்டியளித்த அவரிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கையை, எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆவேசமடைந்த அமைச்சர், 'இந்தியாவில், தமிழகத்தில் மட்டும், அதிகளவு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தரமான சிகிச்சைக்கு பின், குணமடைவோரும் அதிகமாக உள்ளனர். 'கொரோனா தொற்றை தடுப்பதில், அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கையை, ஊடகங்கள் பாராட்டுகின்றன. உங்கள் உள்ளமும் பாராட்டுகிறது; ஆனால் உதடு, பாராட்ட மறுக்கிறது' என்றார்.

இதைக் கேட்ட, மூத்த நிருபர் ஒருவர், 'ஊரடங்குன்னு சொல்வீங்க... ஆனா, 'டாஸ்மாக்'லேர்ந்து எல்லாத்தையும் தொறப்பீங்க... சிஸ்டம் சரியில்லே...' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X