பொது செய்தி

தமிழ்நாடு

இயங்காத சுத்திகரிப்பு மையம்! நல்லாற்றில் கழிவுநீர் சங்கமம்

Added : மே 18, 2020
Share
Advertisement
 இயங்காத சுத்திகரிப்பு மையம்! நல்லாற்றில் கழிவுநீர் சங்கமம்

திருப்பூர்:சுத்திகரிப்பு மையம் செயல்படாததால், நல்லாற்றில் கழிவுநீர், நுங்கும் நுரையுமாக ஓடி, நொய்யலில் கலக்கிறது.திருப்பூர் கூலிபாளையம் அருகே, 400 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் உள்ளது. இக்குளத்துக்கு, நல்லாற்றிலிருந்து தண்ணீர் வருகிறது. மாநகரின் முதல் மற்றும் இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் வெளியேறும் சாக்கடை கழிவு, நல்லாற்றில் கலக்கிறது.
நல்லாற்று நீரை சுத்திகரிப்பதற்காக, குளத்தின் அருகே, பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட, சுத்திகரிப்பு மையம் செயல்படாமலேயே உள்ளது.இதனால், நல்லாற்றில் வரும் கழிவுநீர், சுத்திகரிக்கப்படாமலேயே, வாய்க்கால் வழியாக ஓடி, நொய்யலாற்றில் கலக்கிறது.நேற்று, நஞ்சராயன் குளம் சுத் திகரிப்பு மையத்தின் வாய்க்காலில், கழிவுநீர் அதிகளவில் வழிந்தோடியது.
சாக்கடை கழிவுநீரில், ஆங்காங்கே வெண்மை நிறத்தில், நுரை பந்துபோன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, நொய்யலில் கலந்தன. கழிவுநீரால், அருகிலுள்ள நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. சுத்திகரிப்பு மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, நல்லாற்று நீரை சுத்திகரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X