தமிழ்நாடு

நம்பிக்கை! விதிமுறைகள் தளர்வால் தொழிலாளர் பணிக்கு வந்து செல்வதில் ஏற்பட்ட சிக்கல் விலகல்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement
நம்பிக்கை! விதிமுறைகள் தளர்வால் தொழிலாளர் பணிக்கு வந்து செல்வதில் ஏற்பட்ட சிக்கல் விலகல்

திருப்பூர்:'விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், தொழிலாளர் பணிக்கு வந்து செல்வதில் ஏற்பட்ட சிக்கல் விலகியுள்ளது' என, திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த, 6ம் தேதி முதல், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன. பாதியில் நிறுத்தப்பட்ட ஆடை தயாரிப்பு, முக கவசம், முழு கவச ஆடை தயாரிப்பில், நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன.
ஊரடங்கு தளர்வுக்குப்பின், வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது அதிகரித்துள்ளது. சொந்த ஊர் செல்லாத, பிற மாவட்ட தொழிலாளர் ஏராளமானோர் உள்ளனர். இ--பாஸ் பெற வேண்டியிருந்ததால், இந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர், பணிக்கு திரும்பவில்லை.மூன்றாம் கட்ட ஊரடங்கு நேற்று முடிந்தது. இந்நிலையில், தமிழக அரசு, வரும் 31ம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ளது. அதே நேரம், மாவட்டத்துக்குள், வாகனங்கள் இ--பாஸ் இன்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆடை உற்பத்தி துறையில், டெய்லர்களின் பங்களிப்பு மிக இன்றியமையாததாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் தற்போது, 20 சதவீத்துக்கும் குறைவான தொழிலாளரே பணிக்கு திரும்பியுள்ளனர். குறிப்பாக, டெய்லர் வருகை மிக குறைவாக உள்ளது.முககவசம், முழு கவச ஆடை, வழக்கமான ஆடை தயாரிப்புகளுக்காக, நிறுவனங்கள் டெய்லர்களை தேடத்துவங்கியுள்ளன.
இதற்காக, நகரில் பல்வேறு பகுதிகளில், ஓவர்லாக், பிளாட் லாக், சிங்கர் டெய்லர் தேவை விளம்பர போர்டுகள் அதிகரித்துள்ளன.பின்னலாடை துறையினர் கூறுகையில்,''மாவட்டத்துக்குள் இ--பாஸ் தேவையில்லை என்ற அறிவிப்பு, மகிழ்ச்சியளிக்கிறது. சிரமங்கள் விலகியுள்ளதால், தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்து செல்வர் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X