பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை காக்க பயன்படும் ஓய்வு

Added : மே 18, 2020
Share
Advertisement
 பசுமை காக்க பயன்படும் ஓய்வு

பல்லடம்:பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக, பருவாய் கிராம மக்கள், 5,000 மரக்கன்று நடுவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊரடங்கு ஓய்வை சாதகமாக்கி, பல்லடம் ஒன்றியம், பருவாய் கிராம மக்கள், பசுமையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குட்டைகள், அரசு, தனியார் மற்றும் கோவில் நிலங்கள் என, பல இடங்களிலும், மரக்கன்று நட்டு, பசுமையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். 5 ஏக்கர் பரப்பளவுள்ள மேய்ச்சல் நிலத்தில், 5,000 மரக்கன்று நடுவதற்கான ஆயத்தப்பணிகளில், இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது;ஆறாக்குளம் தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை, பருவாய் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றம், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, மரக்கன்று நடும் பணியை மேற்கொண்டு வருகிறோம். வேம்பு, புங்கன், வாகை, நிலவேம்பு, மகிழம் உள்ளிட்ட பலவகை மரங்களை நடவுள்ளோம். மரக்கன்று நட குழிகள் தோண்டப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான ஆயத்த பணி மேற்கொண்டு வருகிறோம்,'' என்றனர். அவர்கள், சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X