பொது செய்தி

தமிழ்நாடு

நலவாரிய தொழிலாளருக்கு சிறப்பு முகாம்: கணக்கு துவக்க ஆர்வம்

Added : மே 18, 2020
Share
Advertisement

பல்லடம்:நலவாரிய தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம், பல்லடம் தபால் அலுவலகத்தில் நேற்று நடந்தது.அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில், கைத்தறி, தையல், கட்டுமான தொழிலாளர், மீனவர் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் உள்ளனர். ஊரடங்கால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, மத்திய மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.அவ்வகையில், நலவாரிய தொழிலாளர்களுக்கு, நிவாரண தொகை மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிவாரண தொகை பெற விரும்பும் நலவாரிய தொழிலாளர்களுக்கு சேமிப்பு கணக்கு துவக்கும் சிறப்பு முகாம், பல்லடம் தபால் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆவணங்களுடன் வந்த தொழிலாளர்கள் பலர், பார் கோடுடன் கூடிய அட்டைகளை பெற்று சென்றனர்.தபால் அலுவலர்கள் கூறியதாவது;நிவாரண தொகை பெறுவதற்காக, சேமிப்பு கணக்கு துவக்கப்படுகிறது; டெபாசிட் தொகை எதுவும் கிடையாது. நிவாரண தொகைக்கு மட்டுமன்றி, சேமிப்புக் கணக்காகவும் இதை பயன்படுத்தலாம்.இதற்கு, சேமிப்பு கணக்கு புத்தகம் தேவையில்லை. 'பார் கோடு'டன் கூடிய அட்டையை பயன்படுத்தி, எந்த வங்கியிலும் பண பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.சேமிப்பு கணக்கு துவக்க விரும்புவோர் மற்றும் நலவாரிய உறுப்பினர்கள், உரிய ஆவணங்களுடன் தபால் அலுவலகத்தை அணுகலாம். பலரும், ஆர்வமுடன் சேமிப்பு கணக்கு துவக்கி வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X