விளையாட்டு வினையானது; பறிபோனது பெண்ணின் உயிர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வினையானது; பறிபோனது பெண்ணின் உயிர்

Added : மே 18, 2020
Share

அவிநாசி:அவிநாசியில், இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம், பெண்ணின் உயிரை பறித்தது.அவிநாசி அருகே, மடத்துப்பாளையம், செம்பாண்டம்பாளையத்தில் உள்ள சிறிய மைதானத்தில், நேற்று மதியம், சின்னேரிபாளையம் ஊராட்சி, கணேசபுரம் பகுதி இளைஞர்களும், மடத்துப்பாளையம் வினோபா வீதி இளைஞர்களும், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தகராறில் கைகலப்பு ஏற்பட்டது. இதில், கணேசபுரத்தை சேர்ந்த ஜீவா என்ற இளைஞர் காயமடைந்தார்.தகவலறிந்த அவரது பெற்றோர், பழனிசாமி, கொண்டாள் மற்றும் சில இளைஞர்கள் நியாயம் கேட்க, மடத்துப்பாளையம் சென்றனர். அங்கு மீண்டும், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், வீட்டின் கூரையில் வேயப்படும் ஓடு மூலம், கொண்டாள், 35, பலமாக தாக்கப்பட்டார். சிவா, ஜீவா, பழனிசாமி ஆகியோரும் தாக்கப்படுகின்றனர்.படுகாயமடைந்த கொண்டாள், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.விவரம் அறிந்து, அவரின் உறவினர்கள், அவிநாசி அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டு, 'தாக்குதல் நடத்தியவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.கூடுதல் எஸ்.பி., ஜெயசந்திரன், டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர்.இதற்கிடையில், கொண்டாளை தாக்கிய, தமிழ்செல்வன் உட்பட சில இளைஞர்களை போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அவிநாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X