அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை விரைவில் பச்சை மண்டலமாகும் ; அமைச்சர் உதயகுமார் தகவல்

Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 மதுரை விரைவில் பச்சை மண்டலமாகும் ; அமைச்சர் உதயகுமார் தகவல்

மதுரை : ''மதுரை விரைவில் கொரோனா இல்லா பச்சை மண்டலமாகும்,'' என, மதுரையில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

எஸ்.எம்.பி., காலனியில் கொரோனா தடுப்பு பணியை கலெக்டர் வினய், கமிஷனர் விசாகன் முன்னிலையில் அமைச்சர் ஆய்வு செய்தார். அங்குள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, கபசுர குடிநீர் பவுடர் வழங்கிய பின் அவர் கூறியதாவது: கொரோனாவை தடுக்க தொலைநோக்கு திட்டங்களை முதல்வர் பழனிசாமி செயல்படுத்துகிறார். ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஜூன் வரை ரேஷன் பொருட்களை விலையின்றிவழங்க உத்தரவிட்டுள்ளார்.

நகரில் 142 வரையறுக்கப்பட்ட குடிசைப்பகுதி, 189 வரையறுக்கப்படாத குடிசைப்பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது, என்றார். எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, நகர் பொறியாளர் அரசு, உதவி கமிஷனர் பிரேம்குமார், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, செயற்பொறியாளர் ராஜேந்திரன், பி.ஆர்.ஓ., சித்திரவேல் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
18-மே-202021:50:54 IST Report Abuse
Ketheesh Waran எல்லாப் புகழும் அஞ்சாநெஞ்சன் அண்ணண் அழகிரிக்கே
Rate this:
Cancel
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
18-மே-202010:52:50 IST Report Abuse
sivam தெர்மக்கோளில் பச்சை நிற பெயிண்ட் அடித்து பேனர் மாதிரி கட்டிவிட்டுருங்க.. இந்த அனுபவம் தான் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X