பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசன மானியம் :விவசாயிகளுக்கு அழைப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி, தோட்டக்கலை துறை சார்பில், சொட்டு நீர் பாசன மானியம் பெற, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மாலதி அறிக்கை:மழைப்பொழிவு குறைந்த, அவிநாசி வட்டாரத்தில், ஒவ்வொரு துளி நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக விளைச்சலை பெறும் பொருட்டு, இத்திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம், பிற விவசாயிகள், 75 சதவீத மானியத்திலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.பதிவு செய்ய விரும்புவோர், தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிட்டா, அடங்கல் நில வரைபடம், கூட்டு வரைபடம், சிறு குறு விவசாயி சான்று, மண் நீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்யலாம்.தோட்டக்கலை உதவி இயக்குனர் (76676 90259), தோட்டக்கலை உதவி அலுவலர்கள் (95247 27052, 86755 56865, 97503 27875) என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் அதில், கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X