பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி கவுன்சிலர்க்கு அபராதம் விதிக்க முடிவு

Added : மே 18, 2020
Share
Advertisement

அனுப்பர்பாளையம்:முறைகேடாக தண்ணீர் இணைப்பு பெற்ற ஊராட்சி கவுன்சிலர்க்கு அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டது.திருப்பூர் அடுத்த, தொரவலுார் ஊராட்சி, 6வது வார்டு உறுப்பினர் சித்ரா; இவரது தந்தை மூர்த்தி. ஊராட்சியில் குடிநீர் வினியோகிப்பாளராக பணியாற்றுகிறார். சித்ரா, தனது வீட்டிற்கு தந்தை மூர்த்தியின் உதவியுடன், அனுமதியின்றி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக, அப்பகுதி மக்கள், ஊராட்சி தலைவர் தேவகியிடம் புகார் தெரிவித்தனர்.ஊராட்சி மன்ற அவசர கூட்டம் தலைவர் தலைமையில் கூட்டப்பட்டது. துணை தலைவர் சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.ஊராட்சியில் முறைகேடாக தண்ணீர் இணைப்பு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்; முறைகேடாக தண்ணீர் இணைப்பு பெற்ற உறுப்பினர் சித்ரா, உடந்தையாக செயல்பட்ட மூர்த்திக்கு, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; அவர்கள் பெற்றிருந்த குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X