ஆம்புலன்சில் பிறந்த குழந்தை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

Added : மே 18, 2020
Share

திருப்பூர்:திருப்பூர், ஊத்துக்குளி அடுத்த திம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 35. இவரது மனைவி சத்யா, 29. நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது.உறவினர்கள், '108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில், சத்யாவை அழைத்து வந்த போது, பவர்ஹவுஸ் அருகே, பிரசவ வலி அதிகமானது. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் மீனா, டிரைவர் முத்துகிருஷ்ணன் உதவியுடன், பிரசவம் பார்த்தார்; அதிகாலை, 4:05 மணிக்கு, சத்யாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் பணியாளர்களை உறவினர்கள் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X