பொது செய்தி

தமிழ்நாடு

வாகன போக்குவரத்து விதிமீறல்: அபராத நடவடிக்கை துவங்கியது

Added : மே 18, 2020
Share
Advertisement

அவிநாசி:ஊரடங்கு விதி தளர்த்தப்பட்டு, வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதனால், வாகன போக்குவரத்து முடங்கியது; ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.ஆங்காங்கே 'செக்போஸ்ட்' அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில், வாகன போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை.ஊரடங்கில், சில தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வாகன விபத்துகளை தவிர்க்க, வழக்குப்பதிவு செய்ய, போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, போலீசார் பதிவு செய்து, அபராதம் விதிக்கின்றனர். அபராதம் செலுத்த, தங்களிடம் பணம் இல்லை என கூறினாலும், ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்த ஏதுவாக, அபராத தொகை அடங்கிய ரசீதை, போலீசார், வாகன ஓட்டிகளிடம் வழங்கி, இம்மாத இறுதிக்குள் ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி அனுப்பி விடுகின்றனர்.அவிநாசி பிரதான ரோட்டில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சதாசிவம், வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X