திருப்பூர்:திருப்பூரில் இருந்து நேற்று கிளம்பிய ஆறாவது ரயிலில், 1,464 வட மாநிலத்தவர், சொந்த ஊர் சென்றனர்.புலம் பெயர் தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலம் செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இம்மாதம், 10, 12ம் தேதி பீகார், முஷாபர் நகருக்கு இரு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில், 2,280 பேர் பயணித்தனர். 13ம் தேதி, ஒரே நாளில், ஒடிசா மாநிலம், பாலசூர் மற்றும் உ.பி.,யின், கோரக்பூருக்கு இயக்கப்பட்ட இரு ரயிலில், 2,928 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் பீகாருக்கு சென்ற ரயிலில், 1,464 பேர் சென்றனர்.நேற்று மதியம், 1:30 மணிக்கு பீகாருக்கு (ஹஜ்பூர்) மற்றொரு ரயில் இயக்கப்பட்டது. முன்னதாக, தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பயணத்தின் போது தேவையான உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டன.முக கவசம் அணிந்தவர் மட்டும், ரயிலில் ஏற்றப்பட்டனர்; 1464 பேர் பயணித்தனர். இதுவரை திருப்பூரில் இருந்து பீகாருக்கு ஐந்து ரயில், ஒடிசாவுக்கு ஒரு ரயில் என, ஆறு ரயிலில், 8,136 பயணித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE