சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயானம், ஓடைக்கரையில் மரம் வெட்டி சாய்ப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement
 மயானம், ஓடைக்கரையில் மரம் வெட்டி சாய்ப்பு

பல்லடம்:பல்லடம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், இருவேறு இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டன.பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே, நகராட்சிக்கு சொந்தமான மயானம், புதர் மண்டிக்கிடந்த நிலையில், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்த, நிழல் தரும் சில மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.இதேபோன்று, பல்லடம் நகராட்சி எல்லை வழியாக செல்லும் நீரோடை துார்வாரும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது. ஓடை வழித்தடத்தின் ஓரமாக இருந்த பழமையான வேப்ப மரம், வேருடன் வெட்டப்பட்டது.பசுமை ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், 'மயானத்தில், நிழலுக்காக, தன்னார்வலர்கள் பலரின் முயற்சியால், மரக்கன்று கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. நிழல் தரும் மரங்களாக அவை வளர்ந்து நிற்கும் சூழலில் வெட்டப்பட்டுள்ளன. இதுநாள் வரை புதர்மண்டிக் கிடந்த மயான சீரமைப்புப்பணியை வரவேற்கிறோம். ஆனால், நிழல் தரும் மரங்கள் வெட்டப்பட்டது கண்டனத்துக்குரியது. ஓடையருகே வளர்ந்திருந்த மரத்தை வேருடன் வெட்டியதும், கண்டனத்துக்குரியது,' என்றனர்.நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவகுமாரிடம் கேட்டதற்கு, ''இதுதொடர்பாக, யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. மரங்கள் வெட்டப்பட்டது குறித்து, நகராட்சி பொறியாளரிடம் தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X