திருப்பூர்:பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொது இடங்களில், ஐந்து பேருக்கு அதிகமாக கூடினால், நடவடிக்கை பாயுமென, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த, மாநில அரசு, நான்காவது முறையாக, வரும், 31ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, ஊரடங்கை நீட்டித்துள்ளது. திருப்பூர், கோவை உள்ளிட்ட, 25 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது; இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு அனுமதி பெற்று, பஸ்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.'இ-பாஸ்' பெறாமலேயே, மாவட்டத்துக்குள் சென்று வரலாம்; பிற மாவட்டம் செல்ல,'இ-பாஸ்' கட்டாயம். அரசு மற் றும் தனியார் பஸ்களில், 20 பேர்; வேன்களில், ஏழு பேர்; பெரிய கார்களில், டிரைவர் உட்பட மூன்று பேர்; சிறிய கார்களில் இரண்டு பேர் செல்லலாம்.
தொழிற்சாலைகளில், 100க்கும் குறைவான தொழிலாளர்கள் இருந்தால், 100 சதவீத தொழிலாளருடன் இயங்கலாம்; அதிகமாக இருந்தால், 50 சதவீத தொழிலாளருடன் இயங்கலாம்.மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது;பொது இடங்களில், ஐந்து நபர்களுக்கு மேல் கூடினால் நடவடிக்கை பாயும். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும், மாவட்டத்துக்குள் சென்று வரலாம். பொதுமக்கள், வெளியே வரும் போது, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் சோப்பை பயன்படுத்தி, அடிக்கடி கைகழுவ வேண்டும்.கடந்த, 54 நாட்களாக ஒத்துழைப்பு நல்கிய மக்கள், மேலும், 14 நாட்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE